Aran Sei

மே. வங்கம்: ‘துப்பாக்கியால் மிரட்டி உடலை பறித்து தகனம் செய்தனர்’ – பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் தந்தை புகார்

மேற்கு வங்க மாநிலம் ஹஷ்கலியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடலை துப்பாக்கி முனையில் மிரட்டி பறித்து சென்று தகனம் செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 4 தேதி ஹஷ்கலியை சேர்ந்த 9 வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டு பெண் அதிகாரிகள் அடங்கிய சிபிஐ குழு ஹஷ்காலி காவல்நிலையத்திற்கு சென்று, அங்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது.

மேற்கு வங்கம்: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – மம்தாவின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம்

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தையை சந்தித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

அதில், சிறுமியின் உடலை குற்றம்சாட்டப்பட்டவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பறித்து சென்று தகனம் செய்ததனர் என்றும், இது தொடர்பாக காவல் நிலையம் சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினர் என்றும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

 Source: PTI

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துணிச்சல் மிக்க தமிழன்..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சங்கத்தமிழன்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்