உத்தரபிரதேச மாநிலம் மலியனா கிராமத்தில் 1987 ஆம் ஆண்டு 72 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறைச்சிக் கூடத்தில் வேலை செய்த 2 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கைது – தீவிரவாத தடுப்புப் படை நடவடிக்கை
மூத்த பத்திரிகையாளர் குர்பான் அலி தாக்கல் செய்த பொதுநல மனுவில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்றத்தின் ஆவணங்களும், முதல் தகவல் அறிக்கையும் காணாமல் போனதால் விசாரணை நீதிமன்றத்தில் இன்றுவரை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19 அன்று பொதுநல மனுவை விசாரித்த செயல் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ் மற்றும் நீதிபதி பிரகாஷ் பாடியா அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இதுகுறித்து உத்தரபிரதேச அரசைப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யஉத்தரவிட்டுள்ளது.
மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்
1987 ஆம் ஆண்டு ஹாசிம் புரா பகுதியில் நடந்த கலவரத்தில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 31 ஆண்டுகளில் 800 நாட்கள் முடிவு செய்யப்பட்டாலும் தற்போது 35 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.