Aran Sei

ஹரியானா துணை முதல்வர் நிகழ்ச்சியில் நுழைய முயன்ற விவசாயிகள் –  கூட்டத்தைக் கலைக்க தண்ணீர் பிரங்கியை பயன்படுத்திய காவல்துறை

ரியானா மாநிலம் ஜாஜ்ஜர் பகுதியில், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில்  விவசாயிகள் பங்கேற்க முயன்றனர். இதன் காரணமாக கூட்டத்தைக் கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர் காவல்துறையினர்.

ஜாஜ்ஜர் அரசு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள முயன்ற விவசாயிகள், தடுப்புகளை தாண்டி விவசாயிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஜாஜ்ஜரின் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

சீனாவில் கடுமையான மின் தட்டுப்பாடு – ஆசிய பொருளாதாரம் சரிவை சந்திக்கும் என்று கணிப்பு

முன்னதாக கர்னல் மாவட்டம் இந்திரி பகுதியில், பாஜக கூட்டம் நடைபெற்ற இடத்தில், விவசாயிகள் தடுப்புகளை மீறி நுழைய முயன்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் இந்திரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராம் குமார் கஷ்யப் மற்றும் மூத்த பாஜக தலைவர் பவன் சைனி கலந்து கொண்டனர்.

ஹரியானாவில், மூன்று விவசாய சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி போராடி வரும் விவசாயிகள், ஆளும் பாஜக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை தடுக்க முயன்று வருகின்றனர்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்