Aran Sei

விவசாய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாஜக தலைவருக்கு எதிரான போராட்டம் – விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறை

ரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்னல் நகர் நோக்கிச் சென்ற விவசாயிகளை தடியடி நடத்தி கலைத்ததன் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, ஹரியானா விவசாயிகள் அம்மாநில சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவின் முக்கிய சாலைகளான ஃபதேஹாபாத்-சண்டிகர், கோஹனா-பானிபட் மற்றும் ஜிந்த்-பாட்டியாலா நெடுஞ்சாலைகள் விவசாயிகளால் முடக்கப்பட்டுள்ளது.

ஹரியானா பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குர்ணம் சிங் சடுனி, விவசாயிகளைக் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதால் பலர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளார்.

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால், “விவசாயிகளின் போராட்டம் அமைதியான வழியில் இருந்தபோதிலும், விவசாயிகள் காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். தடியடிக்கு உள்ளாகினர்.” என்று தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின்போது விவசாயிகள் தடுப்பை தாண்ட முயன்றால், அவர்களின் மண்டையை உடைக்குமாறு காவல்துறையினருக்கு கர்னல் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆயுஷ் சின்ஹா உத்தரவிடுவதாக வெளியான காணொளி சமூக வலைதளங்களில் பேசுப் பொருளானது.

ஆயுஷ் சின்ஹாவை பதவி நீக்கம் செய்வதோடு, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஹரியானா மாநிலத்திலும் விவசாய சட்டங்களுக்கு  எதிரான போராட்டம்  தொடங்கியதில் இருந்து, அம்மாநில விவசாயிகள் ஆளும் பாஜக – ஜனநாயக் ஜனதா தளக் கூட்டணிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: New Indian Express

தொடர்புடைய பதிவுகள்:

ஹரியானாவை தொடர்ந்து பஞ்சாபிலும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: முற்றுகையிடப்படும் பாஜக தலைவர்கள்

பாஜக ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு – எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேரணி

ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக பரப்ப்புரை – விவசாயிகள் தீர்மானம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்