Aran Sei

டிராக்டரில் சட்டபேரவைக்கு சென்ற ஹரியானா எம்.எல்.ஏ – விவசாய சட்டங்களைக் கண்டித்து ராஜினாமா

விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாததால், ஹரியானா மாநிலத்தின் இந்திய தேசிய லோக் தள கட்சியின் எம்.எல்.ஏ வான அபய் சிங் சௌதாலா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லெனாபாத் சட்டமன்ற தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்றத்திற்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 57 வயதான அபய் சௌதாலா பதவியை ராஜினாமா செய்ய ஹரியானா சட்டப்பேரவைக்கு டிராக்டரில் சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு

இந்த மாதத்தின்  தொடக்கத்தில், ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவிற்கு செளதாலா கடிதம் ஒன்றை எழுதியதாக, என்டிடிவி  கூறியுள்ளது.

அதில், மத்திய அரசு ஜனநாயக விரோத முறையில், கறுப்பு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது எனக் குற்றம் சாட்டியதோடு, ”ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அச்சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால், இந்தக் கடிதத்தை, எனது ராஜிமானாவாக ஏற்று கொள்ளுங்கள்” என அந்தக் கடிதத்தில், சௌதாலா எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி – 12 நாட்களில் 9 பேர் உயிரிழப்பு – ” வெளிப்படைத்தன்மை வேண்டும் “

60 மரணங்கள் மற்றும் பல தற்கொலைகளுக்குப் பிறகும், மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்க மறுப்பதால், ஒரு பொறுப்பான சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் போராட்டத்தில், ஏதேனும் ஒரு வகையில் பங்காற்ற இருக்கிறேன் எனச் சௌதாலா தெரிவித்துள்ளதாக, என்டிடிவி  கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்