Aran Sei

‘விவசாயிகளின் உயிரிழப்புகள் ஆண்டின் சராசரி இறப்பு விகிதத்தோடு சமனில் உள்ளது’ – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

ற்போதைய விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையும் வருடாந்திர இறப்பு விகிதமும் ஒன்றுதான் என்றும் அவர்கள் தங்கள் வீடுகளிலும் இறந்திருப்பார்கள் என்றும் பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில விவசாய துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அண்மையில், விவசாயிகள் போராட்டம்குறித்து செய்தியாளர்கள் மத்தியில் ஜெய் பிரகாஷ் தலால் பேசும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது.

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

அதில், “விவசாயிகள் ​​போராட்டத்தின்போது நிகழ்ந்த விவசாயிகள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது, ஓராண்டுக்கான இறப்பு விகிதத்தோடு சமனில் இருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 1 முதல் 2 லட்சம் வரையுள்ள மக்கள் தொகையில், சுமார் 200 பேர் இறக்கின்றனர். ஆகவே, உயிரிழந்த இந்த விவசாயிகள் தங்கள் வீடுகளிலும் இறந்திருப்பார்கள். போராட்டத்தின்போது இயற்கை காரணங்களால் இறந்திருப்பார்கள். சிலர் மாரடைப்பால் இறந்திருப்பார்கள்.” என்று அமைச்சர் தலால் கூறியுள்ளார்.

அப்போது, ஒரு பத்திரிகையாளர் குறுக்கிட்டு, “ஏன் அவர்களிடம் உங்களால் அனுதாபத்தைக் காட்ட முடியாது?” என்று எழுப்பிய கேள்விக்கு, ​“அனுதாபத்தைத் துண்டுத்துண்டாகக் காட்ட முடியாது. 135 கோடி மக்கள்மீதும் எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஒரு நபர் இறந்து போனால், அவரின் முழு குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இவர்களில் பலருக்கு (இறந்த விவசாயிகளுக்கு) சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு நான் என் முழு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிலளிக்க, அவரைச் சுற்றியுள்ளவர்கள் சிரிக்கிறார்கள்.

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

“சராசரி விவசாயி ஒரு அப்புரானி. மற்றவர்களுக்கோ அல்லது அவரது சொந்த சாதியினருக்கோ  அனுதாபத்தைப் பெற்று தர, போராட்டத்தின்போது தங்களுடைய உயிரை மாய்கிறார்கள். எங்கள் சொந்த மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள். விரைவில் அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.” என்று ஜாட் சமூகத்தைச் சேர்ந்த தலால், ஹரியானாவில் தனது சொந்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்பதைக் குறிப்பிடுகிறார்.

‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

இதற்கு முன்பே, “பாகிஸ்தான், சீனா போன்ற வெளிநாட்டு சக்திகள் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில், இந்தியாவில் ஒரு பதட்டத்தை உருவாக்க விளைகின்றன.” என்று தலால் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்