Aran Sei

கொடூரமாகத் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் – பின்னணியில் அதானியா? போதைக் கும்பலா?

ஐபிஎன் 24 எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகர்ஷன் உப்பல் இந்த வாரத் தொடக்கத்தில் ஹரியானாவின் கர்னல் பகுதியில் போதைக் கடத்தல் தொடர்பான செய்தியை வெளிக் கொண்டுவந்துள்ளார். இதையடுத்து அவர் அந்தக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய உடல்நிலை மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவமனைக்குச் சென்று அகர்ஷனுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார்.

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

ஆனால் பல ஊடகவியலாளர்கள் இந்தச் சம்பவத்தில் பல்வேறு கருத்துகளை முன் வைக்கின்றனர். விவசாயச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி, அவற்றில் வேளாண்மைப் பொருட்களைச் சேமித்து வைக்கும் வகையிலான கட்டடங்களை அதானி குழுமம் கட்டி வருவது குறித்த விரிவான செய்திகளை வெளிக் கொண்டுவந்ததால் அவர் தாக்கப்பட்டுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொலியைப் பதிவு செய்துள்ளார் அதில் “ஹரியானாவின் பானிபட்டில் அதானி குழுமம் கோதுமை சேமிப்பிதற்காக 100 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. விவசாயச் சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பே அதானி குழுமம் நிலம் வாங்கியது எப்படி? ரயில்வே தொழிற்சாலையை நிறுவுதல் என்ற பெயரில் கிராமவாசிகள் நிலங்கள் விற்கப்பட அழுத்தம் கொடுக்கப்பட்டதா? எம்.எல்.ஏ முதல் எம்.பி வரை இதற்கு அனுமதி கொடுத்த யாரும் இந்தத் திட்டம் குறித்து பேசாமல் இருப்பது ஏன் என எழுப்பப்பட்ட கேள்விக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பதில் வரவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/aakarshanuppal1/posts/3765583763492692

பாஜக தலைமையிலான ஹரியானா அரசாங்கத்திடமிருந்து நிலப் பயன்பாட்டை மாற்றுவதற்கான அனுமதியைப் பெற்ற பிறகு, அதானி குழுமம் பானிபட்டின் ஜொந்தன் கலன் மற்றும் நல்தா கிராமங்களில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) வாங்கிய உணவு தானியங்களைச் சேமிப்பதற்காக உயர் தொழில்நுட்பக் குழிகளை நிர்மாணித்து வருகிறது என டிரிபுயூன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்