Aran Sei

சாதி வன்முறை குறித்து பதிவிட்ட பத்திரிகையாளர் – இணைய பயங்கரவாதி என்று குற்றஞ்சாட்டபட்டு வழக்குப்பதிவு

ரியானாவில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர்மீது அம்மாநில காவல்துறை இணைய பயங்கரவாதம் என்று வழக்கு பதிந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சார்ந்த பத்திரிகையாளர் ராஜேஷ்குண்டு மீது அம்மாநில காவல்துறை இந்தியா தண்டனை சட்டம் பிரிவு 153A, 153B தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66Fஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் கடத்தி செல்லப்பட்ட பத்திரிகையாளர் – முன்விரோதம் காரணமாகக் கொலையா?-காவல்துறை விசாரணை

ஹிசார் பகுதியில் நடந்த சாதி ரீதியிலான வன்முறைகுறித்து பத்திரிகையாளர் ராஜேஷ்குண்டு தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வன்முறை சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் இருந்தார் எனவும் என தி வயர் செய்தி கூறுகிறது.

இந்நிலையில், சாதி மோதலைத் தூண்டும் விதமாக இணைய பயங்கரவாதம் எனக்குறிப்பிட்டு காவல்துறை வழக்கு பதிந்துள்ளதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

இந்நிலையில், இந்த வழக்கை திரும்ப பெறவேண்டுமமென காங்கிரஸ் கட்சியினரும், பத்திரிகையாளர் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் பத்திரிகையாளர் சங்கத்தினரும் பத்திரிகையாளர் ராஜேஷ்குண்டு மீதான வழக்குப் பதிவிற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை – மூத்த கூட்டு நாட்டை அச்சுறுத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

மேலும், பத்திரிகையாளர் ராஜேஷ்குண்டு டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம்குறித்து தொடர்ந்து விவசாயிகளின் குரலாய் செய்தி வெளியிட்டு வந்ததாகப் பத்திரிகையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்