Aran Sei

‘கோபத்தை தாங்கிக்கொள்ளலாம்; சடலங்களாக மக்கள் குவிந்து கிடப்பதை காண இயலாது’ – கொரோனா கட்டுப்பாடு குறித்து அரியானா அமைச்சர்

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், மக்கள் கோபம் கொண்டால் தாங்கிக் கொள்வோம். ஆனால், உயிரற்ற சடலங்களாக மக்கள் குவிந்து கிடைப்பதை காண முடியாது என்று பாஜகவை சேர்ந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 15), ஹரியானா மாநில அரசு எடுத்து வரும் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து அனில் விஜ் ஏஎன்ஐ-யிடம் பேசியுள்ளார்.

‘கொரோனாவை தேசிய பேரிடராக கருதி மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி தாருங்கள்’ : மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

அப்போது, “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இரு வழிகள்தான் உள்ளன. ஒன்று, பொது முடக்கத்தை அமல்படுத்துவது. ஆனால், தற்போதுள்ள சூழலில் இது சாத்தியமல்லாதது. பொது மக்கள் பாதுகாப்பான வாழ்வையும், பொருளாதார ரீதியாக பாதிப்பு இல்லாத வாழவையும் வாழ வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

“இரண்டாவது வழி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவது. அதனால், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி, அதைக் கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். இது மக்களுக்கு மிகக் கடினமாகதான் இருக்கும். மக்கள் கோபம் கொண்டால் தாங்கிக் கொள்வோம். ஆனால், மக்கள் உயிரற்ற சடலங்களாக குவிந்து கிடைப்பதை காண முடியாது.” என்று அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்