Aran Sei

விவாசாயிகள் போராட்டத்தால் முடங்கிய தேசிய நெடுஞ்சாலை – பேச்சு வார்த்தை நடத்த அரசு முடிவு

ரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நடத்திய உயர்மட்டக் கூட்டத்திற்குப் பின்னர், டெல்லி எல்லைப் பகுதியில் போராடும் விவசாயிகளால் முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை விடுப்பது குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்புக் குழுவை ஹரியானா அரசு அமைத்துள்ளது.

போராடும் விவசாயிகள் முடக்கி வைத்துள்ள தேசிய நெடுஞ்சாலை-44 குறித்த மனுவை, இன்னும் ஐந்து நாட்களில் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹரியானா அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் முதல், டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லையில், ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கியது முதல், நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது.

கொட்டிய மழை நீரால் மூழ்கிய போராட்டக் களங்கள் – விடாது போராடும் விவசாயிகள்

போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சன்யுக்த் கிசான் மோர்ச்சாவுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இருந்தபோதும், இம்மாத தொடக்கத்தில் ஹரியானா மாநிலம் கர்னலில், விவசாயிகள்மீது அம்மாநில காவல்துறை நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான அதிருப்தி இன்னும் விவசாயிகளிடையே மறைந்தபாடில்லை.

இந்தக் குழு மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் அரோரா தலைமையில் இருக்கும் என்றும் மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார்.

சோனிபட் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே போராடும் விவசாய சங்கத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தேசிய நெடுஞ்சாலை 44-ன் ஒரு பகுதியை காலி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்