Aran Sei

‘பாபா ராம்தேவின் சர்ச்சைக்குள்ளான கொரோனில் மருந்து’: 2 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய ஹரியானா அரசு – ஆர்டிஐ மூலம் அம்பலம்

credits : the indian express

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனில் மருந்தை, பாஜக தலைமையிலான ஹரியானா அரசு 2,72,50,00 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்பிரவரி 19 ஆம் தேதி, டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலைமை தாங்கிய நிகழ்ச்சியில், கொரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.

“உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களின் படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பதற்கான சான்றிதழை (CPP) கொரோனில் பெற்றுள்ளது.” என்று பதஞ்சலி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

அலோபதி குறித்த பாபா ராம்தேவ்வின் கருத்து: இந்திய மருத்துவ சங்கத்தின் புகாரால் வழக்குப் பதிந்த காவல்துறை

இயற்கை முறையிலான மருத்துவத்தின் அடிப்படையில் நியாயமான விலையில் இந்தச் சிகிச்சையை வழங்குவதன் வழியாக, கொரோனில் மனிதகுலத்திற்கே உதவியாக இருக்கும் என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்

கொரோனில் மருந்தின் நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பிய போதிலும், உலக சுகாதார அமைப்பே தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்த பாபா ராம்தேவ், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை ஆய்வு செய்து, கொரோனில் மருந்தை 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமத்தை வழங்கியதாகவும் கூறியிருந்தார்.

அலோபதி குறித்து தவறான கருத்திட்டதாக மருத்துவர்கள் புகார் – பாபா ராம்தேவ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த்ச் சூழலில், ”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மருந்தை தாங்கள் ஆய்வு செய்யவோ அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்தது.

‘தவறான தகவல்களைக் கூறி மக்களைக் குழப்புகிறார் பாபா ராம்தேவ்’ – இந்திய மருத்துவ சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார்

இந்நிலையில், அங்கீகாரம் பெறாத மருந்துகளை மக்களுக்கு வழங்குவது கொரோனா நோய்த்தொற்றினால் மரணமடைவரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என இந்திய மருத்துவ கழகம் அச்சம் தெரிவித்ததை அடிப்படையாக வைத்து, கடந்த மே 25 ஆம் தேதி, ஹரியானாவைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரதீப் ரபாடியா, ஹரியானா அரசு வழங்கும் மருந்து தொடர்பான விவரத்தை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரியிருந்ததாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தை அறிவித்த பயிற்சி மருத்துவர்கள்

இதற்கு பதிலளித்த ஆயூஷ் அமைச்சகம், ஹரியானா அரசு பதஞ்சலி நிறுவனம் தயாரித்த பொருட்களை வாங்கியதாகவும், கொரோனில் மருந்தை 2,72,50,00 (2 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம்) ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

1 லட்சம் கொரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனத்திடமிருந்து வாங்கி மக்களுக்கு பாதி விலையில் வழங்க வேண்டும் என ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் என கடந்த மே 24 ஆம் தேதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்