Aran Sei

பேச்சு சுதந்திரம் என்று வன்முறையைத் தூண்ட அனுமதிக்க முடியாது – ஹரியானா நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ராம் பகத் கோபால், பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். பிணையில் வெளி வந்த காலத்தில், வன்முறை தூண்டும் வகையில் பேசியதற்காக கடந்த திங்கள் கிழமை ஹரியானா காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்க ஹரியானா நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஹரியானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும் கர்னி சேனா அமைப்பின் தலைவருமான சூரஜ் பால் அமு கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், சிறுமிகளைக் கடத்தி, கொலை செய்ய வேண்டும் என்ற வகையில் பேசியதற்காக அவரை ஹரியானா காவல்துறையினர் கைது செய்தனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

பிணையை மறுத்த நீதிபதி பட்டோடி மொஹத் சகீர், “இந்த வகையான பேச்சுக்களின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கலாம், இது வகுப்புவாத வன்முறை மாறலாம்” எனக் குறிப்பிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர் பேசிய காணொளியைப் பார்த்தபோது மனம் முற்றிலும் அதிர்ச்சியடைந்து விட்டது எனக் கூறிய நீதிபதி, “இந்திய சமூகம் இவர்களை சமாளிக்க வேண்டும். இந்த வகையான மனிதர்கள் ஒரு  வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அவர்களின் சொந்த மத வெறுப்பின் பெயரில் அப்பாவி உயிர்களைக் கொல்லும் படுகொலை திட்டத்தை நிகழ்த்துவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

‘பிணை உத்தரவைப் பெற பழங்காலம் போல் புறாக்களை நம்பியிருக்கிறதா சிறை நிர்வாகம்?’ – உச்சநீதிமன்றம் கேள்வி

”குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு முன்பு நிற்பது சாதாரண சிறுவன அல்ல, அவர் யார் என்பதை அவரின் கடந்த கால செயல்பாடுகள் உணர்த்துகின்றன. இன்றைக்கு அதை பயமில்லாமல் அவரால் செய்ய முடியும்… அவர் தனது வெறுப்பை வெகுஜன மக்களிடம் கொண்டு சென்று வழிநடத்த முடியும்” என கூறிள்ளார்.

‘சுதந்திரமான பேச்சு’ மற்றும் ’கருத்து சுதந்திரம்’ என்பது குற்றம்சாட்டப்பட்டவர் பேசியது போன்ற சர்ச்சைக்குரிய மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை தெரிவிப்பதல்ல” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

டேனிஷ் சித்திக்கி: உண்மைக்கு ஒளியூட்டிய மக்கள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்

“பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும்… எனினும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக வன்முறை தூண்டவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது குழுவிற்கு எதிராக வெறுப்பை விதைக்கவோ அனுமதிக்க முடியாது” என நீதிபதி பட்டோடி மொஹ்த் சுகீர் கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்