Aran Sei

‘கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறா?’ – இப்போது விவாதிப்பதில் பயன் இல்லையென பதிலளித்த பாஜக முதல்வர்

கொரோனா இறப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறித்து விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று பாஜகவை சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் காத்தர் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 27), ஏஎன்ஐ-யிடம் பேட்டியளித்த மனோகர் லால் காத்தரிடம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது உண்மையான எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலளித்த அவர், “இறந்தவர்கள் மீளப்போவதில்லை. மற்றவர்களைக் காக்க நாம் நம்முடைய பெரும் முயற்சியைச் செய்வோம். அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறித்து விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

மேலும், கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள இந்த மோசமான சூழலில், தரவுகளை வைத்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 26), ஹரியானா மாநிலத்தில் அதிகபட்ச கொரோனா இறப்பு எண்ணிக்கையாக 75-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில், டெல்லியில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது உண்மையான எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது என்று தனது ஆய்வில் கண்டறிந்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

டெல்லி நகரின் உள்ளாட்சி அமைப்புகளின் கீழுள்ள சுடுகாடுகள் மற்றும் ஏழு சுடுகாட்டு மைதானங்களில் மேற்கொண்ட ஆய்வுகள்  நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 1,150 இறப்புகள் அதிகாரப்பூர்வமான கொரோனா தொற்று இறப்புகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று என்டிடிவி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்