ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில், விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அம்மாநில தலைமைச் செயலாளர் விஜய வர்தன் கர்னல் மாவட்ட காவல்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்னல் நகர் நோக்கிச் சென்ற விவசாயிகளை தடியடி நடத்தி கலைத்ததன் காரணமாக பலர் காயமடைந்தனர்.
போராட்டத்தின்போது விவசாயிகள் தடுப்பை தாண்ட முயன்றால், அவர்களின் மண்டையை உடைக்குமாறு காவல்துறையினருக்கு கர்னல் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆயுஷ் சின்ஹா உத்தரவிடுவதாக வெளியான காணொளி சமூக வலைதளங்களில் பேசுப் பொருளானது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது தடியடி நடத்த காவலர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும், ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹாவிடம் கருத்து கேட்டு, அதையும் தனது அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கர்னல் துணை ஆணையர் நிஷாந்த்குமார் யாதவுக்கு அளித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்ஹா தற்போது கர்னலில் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார்.
ஆயுஷ் சின்ஹாவை பதவி நீக்கம் செய்வதோடு, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்திலும் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியதில் இருந்து, அம்மாநில விவசாயிகள் ஆளும் பாஜக – ஜனநாயக் ஜனதா தளக் கூட்டணிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source: indian express
தொடர்புடைய பதிவுகள்:
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.