Aran Sei

ஹரியானா: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது மதமாற்ற தடை சட்ட மசோதா

ரியானா மதமாற்றம் தடை மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று (மார்ச் 22), நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

மார்ச் 4 அன்று, சட்டப்பேரவையில் (விதான் சபை) நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பலவந்தமாகவோ, வற்புறுத்தியோ, ஏமாற்றியோ அல்லது ஏதேனும் மோசடி வழிகளில் அல்லது திருமணம் வழியாகவோ செய்யப்படும் மத மாற்றங்களை இந்த மசோதா தடை செய்கிறது.

அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டால், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஹரியானா: மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்தும் பாஜக அரசு – காங்கிரஸ் எதிர்ப்பு

இம்மசோதாவின்படி, மைனர், பெண், பட்டியல் சமூகத்தினர் அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒருவர் மதமாற்றம் செய்தாலோ அல்லது மதமாற்றம் செய்ய முயன்றாலோ அவருக்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்தண்டனை 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும், குறைந்தது ரூ. 3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

இம்மசோதா குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், தற்போதுள்ள சட்டங்களில் கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான பிரிவுகள் ஏற்கனவே உள்ளதால் இந்த புதிய சட்டம் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிரண் சவுத்ரி, “இது ஹரியானா மாநில வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். இந்த மசோதா வகுப்புவாத பிரிவினையை ஆழப்படுத்தும். எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் மதமாற்ற எதிர்ப்பு மசோதா தாக்கல் – அரசியலமைப்பை சீர்குலைக்கும் செயல் என்று காங்கிரஸ் கண்டனம்

ஹரியானா மட்டுமின்றி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இது போன்ற மசோதாக்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்