Aran Sei

ஹரியானாவிலும் மத மாற்றத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் – உள்துறை அமைச்சர் தகவல்

credits : PTI

பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில், கட்டாய மத மாற்ற தடுப்பு சட்ட மசோதாவை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹரியானாவின் சட்டமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அனில் விஜ், ”யார் வேண்டுமானாலும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம், யார் வேண்டுமானாலும் யாரையும் காதலிக்கலாம். ஆனால் ஒருவரை காதலில் சிக்க வைத்து மதத்தை மாற்றுவதற்கான சதி நடந்தால், அந்த சதியை தடுக்க வேண்டியது அவசியம். அதை தடுப்பதற்கு தேவையான தக்க நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர், கடந்த நவம்பர் மாதம், கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை தயாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார்.

ஹரியானாவிலும் “லவ் ஜிகாத்”துக்கு எதிராகச் சட்டம் – தொடரும் வெறுப்பு அரசியல்

இந்நிலையில், அந்த குழுவுடன் நேற்று கலந்தாலோசித்த அனில் விஜ், “இந்தச் சட்டம் கட்டாயப்படுத்தியோ, தூண்டுதலின் பேரிலோ, மோசடி செய்தோ அல்லது நெறிமுறையற்ற வகையிலோ நடக்கும் மதமாற்றத்தை தடுக்கும். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிக்கை வெளியிட்டார்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மத மாற்றங்களுக்கு எதிரான மசோதாவின் வரைவை நாங்கள் தயாரித்துள்ளோம். இது ஹரியானாவின் விதான் சபாவில் (சட்ட கிழ் அவை) வரவிருக்கும் பட்ஜெட் அமர்வில் தாக்கல் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

கடந்த 2019 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், இந்தச் சட்டம் தொடர்பாக, ஹிமாச்சல பிரதேச அரசிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். இதை தடுப்பதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்