Aran Sei

நமக்கு அன்றாடம் உணவளிப்பவர்கள் ஒட்டுண்ணிகளா ? – பாஜகவின் ஆணவத்தை பாருங்கள் : ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என அழைத்த பிரதமருக்கு நாடாளுமன்ற  ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பி பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8-2-21 அன்று, மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி,” கடந்த சில ஆண்டுகளில் அந்தோலன் ஜீவி (தொழில் முறை போராட்டக்காரர்கள்) எனும் புதிய இனம் உருவாகியுள்ளது. அவர்களை நீங்கள் அனைத்து போராட்டத்திலும் பார்க்கலாம். அவர்கள் உண்மையில் ஒட்டுண்ணிகள், அவர்களிடமிருந்து இந்த தேசத்தை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

” கார்ப்பரேட் ஜீவி மோடி விவசாயிகளை போராட்ட ஜீவி என்பதா ” – விவசாய சங்கங்கள் கண்டனம்

இந்நிலையில், மக்களவையில், பிரதமர் மோடியின் உரைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பிரதமர் ஒட்டுண்ணிகள் என்கிறார், நமக்கு அன்றாடம் உணவு வழங்குபவர்களை பிரதமர் ஒட்டுண்ணிகள் என குறிப்பிடதற்கு அவர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

 

’’டெல்லியில் நிலவும் கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும்போது அரசாங்கம் தன்னுடைய கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அனைத்து வகையிலும் இந்த அரசு இழிவுபடுத்தியுள்ளது’’ என்று குற்றம் சாட்டிய அவர் குடியரசு தினத்தன்று நிராயுதாபாணியாக இருந்த விவசாயிகள் மீது தடியடி நடத்திது பற்றியும், கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது பற்றியும் கேள்வியெழுப்பியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : பழமையான கூட்டணி முறிந்தது

”பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஆணவத்தை பாருங்கள். இது விவசாயிகளை நக்சல்கள், காலிஸ்தானியர்கள் என்று இழிவுபடுத்தியதுடன், விவசாயிகள் நலன் தொடர்பாக உரையாடுவதற்கு அமைச்சர்களை கூட அனுப்ப மறுத்துவிட்டது. போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை கொள்கையை அரசு பின்பற்றுகிறது” என்று ட்விட் செய்துள்ளார்.

முன்னதாக பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மூன்று வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்குப் பிறகு அமைச்சரவையில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்