Aran Sei

‘பஞ்சாபில் கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் விவசாயிகள் போராட்டமும், உள்ளாட்சி தேர்தலும் ’ – மத்திய அமைச்சர்

ஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் திருமணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல் மற்றும் விவசாயச் சட்டங்களை நீக்க கோரும் விவசாயிகளின் போராட்டமும்தான் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 6) மாலை, பஞ்சாப் உட்பட கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஹர்ஷ வர்தன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

‘தடுப்பூசிகள் நமக்கு’சஞ்சிவி மூலிகை’; பிரமதரின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது’ – மத்திய அமைச்சர்

அப்போது, “பஞ்சாப் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமான தொற்று இங்கிலாந்தை சேர்ந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று என்று அறியப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து  வருகின்றது. இந்த அதிகப்படியான எண்ணிக்கைக்கு  முக்கிய காரணங்களாக திருமணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவை உள்ளன.” என்று அவர் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், அண்மையில் நடந்த தேர்தல்கள், கும்பமேளாக்கள், அலுவலகங்களை மீண்டும் திறந்தது, பொதுமக்கள் நடத்திய நிகழ்ச்சிகள் மற்றும் முக கவசத்தை முழுமையாக உபயோகிக்க தவறியது ஆகியவையும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று உச்சத்திற்கு காரணம் என்று ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்