Aran Sei

மக்கள் குறித்து பேசாமல், தற்பெருமை பேசுகிறார் – பிரதமரின் தொலைபேசி அழைப்பு குறித்து ஜார்க்ண்ட முதல்வர் கருத்து

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் - Image Credit : thewire.in

க்களின் நிலைமை குறித்து பேசாமல், ‘மன் கி பாத்’தில் பேசுவது போலவே, மாநில முதலைமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார் என, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இன்று மரியாதைக்குரிய பிரதமர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ‘மன் கி பாத்’தில் பேசுவது போலவே பேசினார். இதற்கு பதிலாக மக்களின் பிரச்னை குறித்து பேசியிருந்தால் நன்றாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

தன்னை பேச விடாமல், பிரதமர் மட்டுமே பேசியதால், ஹேமந்த் சோரன் அதிருப்தியில் உள்ளார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

”இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட, பிரதமர் அடுத்தவர்கள் பேசுவதை கேட்க விரும்பாமல், தான் பேச வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறார் என்பது கவலையளிக்கிறது” என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பவன் கெரா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களிடமும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்