Aran Sei

சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – 7 பேர் கைது

டெல்லியில் சாதி மறுத்துத் திருமணம் செய்தவரின் வீட்டைத் தாக்கிய வழக்கில் பெண்ணின் வீட்டார் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தத் தம்பதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என அந்தத் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனு மல்கோத்ரா இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

எஸ்சி, எஸ்டி சட்டம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்

தம்பதிகள் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் மோனிகா அரோரா, “ தம்பதிகளில் இருவரும் மேஜர், தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் திருமணம் செய்துள்ளனர். இதனால் 50க்கும் மேற்பட்டவர்களால் அவர்களது குடும்பம் தாக்கப்பட்டுள்ளது” என வாதிட்டிருந்தார்.

பட்டியலின மக்களின் வீடுகள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிந்த முதல் தகவல் அறிக்கையில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஷரத்துகளை குறிப்பிடப்படவில்லை என்றும் அரோரா குற்றம் சாட்டினார்.

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நந்திதா ராவ், “இந்த வழக்கில் , எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு தொடர்புடைய விதிகள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறன. காவல்துறை துணை ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.

மேலும் 10 ஆயுதம் தாங்கிய காவலர்கள் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கேட்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் சார்பில் 4 பேரை டெல்லி காவல்துறை கைது செய்திருந்தது, இந்நிலையில் இன்று கைது செய்தவர்களையும் சேர்த்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்