Aran Sei

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – சிறப்பு விசாரணைக் குழு அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

த்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) உத்தரகண்ட் காவல்துறை அமைத்துள்ளது.

இக்குழு தொடர்பாக பேசியுள்ள கர்வால் மண்டல துணை ஆய்வாளர் (டிஐஜி) கரண் சிங் நக்னால், “ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கை விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் கீழ் ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

பாஜக பேச்சைக் கேட்டு செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் – போராட்டம் நடத்தப்போவதாக பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை

முன்னதாக, இந்துத்துவ தலைவர்கள் யதி நரசிம்மானந்த் சரஸ்வதி மற்றும் சாகர் சிந்துராஜ் ஆகியோரின் பெயர்களையும் இவ்வழக்கில் ஹரித்வார் காவல்துறை இணைத்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உத்தரகண்ட் காவல்துறை இயக்குனர் அசோக் குமார், “சர்ச்சைக்குள்ளான அக்காணொளியின் அடிப்படையில், தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் சாகர் சிந்து மகராஜ் மற்றும் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி ஆகிய இருவரின் பெயர்கள் எஃப்ஐஆரில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டப்பிரிவு 295A-யும் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘பெண்களுக்கு எதிராகப் பதிவான 31,000 குற்றங்கள்’ – உ.பி.யில் அதிகமென தேசிய மகளி்ர் ஆணையம் தகவல்

யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது உபா சட்டம் பதியப்பட வேண்டும் என்றும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. சிறுபான்மையர்களை அச்சுறுத்தியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளன.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்