Aran Sei

உத்தரகண்ட் கும்பமேளாவில் 102 பேருக்கு கொரோனா தோற்று – போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையா?

த்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில்102 பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியில் 12 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் கடந்த 11 தேதி முன்பகல் 11.30 முதல் 12 ஆம் தேதி மாலை 5 மணிவரை 18,169 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 102 பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு தப்லிகி ஜமாத் மாநாட்டை குற்றம் சாட்டியவர்கள்: கும்பமேளா பற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்?

கும்பமேளா குறித்து தெரிவித்துள்ள அம்மாநிலம் முதலமைச்சர் திரந் சிங் ராவத், நாங்கள் கொரனோ தடுப்பு விதிகளை 100% பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும் , கும்பமேளாவில் கொரனோ தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை, முககவசம் அணியாததை கண்காணிக்கவில்லை என்று அந்த  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் கும்பமேளாவில் காவல் துறைக்கு ஆள் பற்றாக்குறை – உதவக்கோரி ஆர்எஸ்எஸுக்கு கடிதம்

இதுகுறித்து தெரிவித்துள்ள அகராஸ் பகுதியில் உள்ள மருத்துவ குழு, ” இன்று ஒருவரை கூட நாங்கள் பரிசோதிக்கவில்லை, நாங்கள் பொதுமக்களை நிறுத்தி எவ்வாறு பரிசோதிப்பது ” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கும்பமேளா நிகழ்வில் 28 லட்சம் பக்தர்கள் பங்கு பெற்றது கவனிக்கத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்