Aran Sei

கும்பமேளாவில் சிறப்பு காவலர்களாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் – நியமித்தது உத்தரகண்ட் காவல்துறை

ரித்துவார் கும்பமேளாவில் 1553 ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை முதன்முறையாகச் சிறப்பு காவலர்களாக உத்தரகண்ட் காவல்துறை நியமித்துள்ளது.

ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

இதனைத் தொடர்ந்து காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை 12 மணிநேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கூட்டநெரிசலை தடுக்க போக்குவரத்து காவல் பணியில் மத்திய காவல் துறைக்கும், மாநில காவல்துறைக்கும் உதவி வருகின்றனர்.

இதே போன்று காங்கிரஸ் சேவா தளம் உட்பட பல சமூக அமைப்புகளும் இந்தக் கும்பமேளாவில் சிறப்பு காவலர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?

உத்தரகண்ட் மாநில காவல்துறை பாதுகாப்பு பணியில் 18-50 வயது வரை உள்ள ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுத்திக்கொள்ள அம்மாநில முழுதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தது, இந்நிலையில் 1553 ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் முதல்முறையாகச் சிறப்பு காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

source: the Indian express 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்