Aran Sei

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு தப்லிகி ஜமாத் மாநாட்டை குற்றம் சாட்டியவர்கள்: கும்பமேளா பற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்?

credits : the indian express

டந்த ஆண்டு, கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது, நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டை கொரோனா ஜிகாத் என கூறி அதற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்ட  அரசியல்வாதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது நடைபெறும் கும்பமேளா தொடர்பாக வாய்திறக்காமல் இருக்கின்றனர். உங்களுடைய கபடநாடகம், அம்பலப்பட்டுவிட்டது. இது மாபெரும் குற்றம்” என்று சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பபட்டு வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் 13 லட்சத்துக்கும் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடைபெறும் மகாகும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது, பக்தர்கள் சூரிய கடவுளுக்கு வணக்கம் செலுத்தி, கங்கையில் புனித நீராடுகின்றனர்.

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு கும்ப மேளா நடைபெற்றது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கும்பமேளா விழா நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், ஏப்ரல் 12, ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகள் கங்கையில் புனித நீராடல் செய்வதற்கான தேதிகள் என அறிவிக்கப்பட்டன.

தப்லிகி ஜமாத் வழக்கு – சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிப் பெண்

கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு நடைபெறும் கும்பமேளா விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. அதிலும், குறிப்பாக, ”கும்ப மேளாவில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்”  என அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஹரித்வாரில் குவிந்துள்ளனர். இது தொடர்பாக ஏஎன்ஐயிடம் பேசிய காவல்துறைத் தலைவர் சஞ்சய் கஞ்ச்யால், “நாங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றக் கோரி மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால், இப்பகுதியில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய முடியவில்லை. நாங்கள் சமூக இடைவெளியை உறுதி செய்தால், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித்த்விக்கும் நிலைமை ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக தப்லிகி ஜமாத்தை குறைகூறியவர்கள் தற்போது லட்சக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் குவிந்திருப்பது தொடர்பாக வாய் திறக்காமல் இருப்பது ஏன் சமூக வலைதளங்களில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசை ச் சேர்ந்த ஊடகவியளரான அனுஷா ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஆண்டு, கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கிய போது, நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டை கொரோனா ஜிகாத் என கூறி அதற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்ட  அரசியல்வாதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது நடைபெறும் கும்பமேளா தொடர்பாக வாய்திறக்காமல் இருக்கின்றனர். உங்களுடைய கபடநாடகம், அம்பலப்பட்டுவிட்டது. இது மாபெரும் குற்றம்” என்று பதிவிட்டுள்ளார்.

தி கேரவன் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான வித்யா கிருஷ்ணன், ”இதற்கு (கும்பமேளா) மோடி அரசாங்கம் அனுமதியளிப்பது ஏன்? இதை ஏற்றுக்கொள்வோம் என்றால், தப்லிகி ஜமாத் அமைப்பினரை சிறையில் வைத்தது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்