Aran Sei

ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு

த்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர நாராயண் தியாகி மற்றும் அன்னபூர்ணா மா ஆகிய இருவருக்கும் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்னபூர்ணா மா மற்றும் ஜிதேந்திர நாராயண் தியாகிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையின்படி மூன்றாவது குற்றவாளியாக அறியப்படும் தரம்தாஸ் மகராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும், மேலும், வழக்கை விசாரிக்கும்போது பல பெயர்கள் சேர்க்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்து சாமியார்கள் – காவல்துறை வழக்குப் பதிவு

இந்த தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்பவர், உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஒரு கோவிலின் தலைமை அர்ச்சகராக உள்ளார். இவர்மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் செய்ய அழைப்பு விடுத்துள்ள யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, 2029-ல் ஒரு இஸ்லாமியர் பிரதமராக வருவதைத் தடுக்க இந்துக்கள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இரு வெவ்வேறு கொரோனா தடுப்புமருந்துகளின் 4 டோஸ்கள் போட்ட பெண்ணுக்கு கொரோனா: இந்தூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

“வலிமையான ஆயுதங்களுடன் யுத்தத்திற்கு வருபவர்கள் வெல்வார்கள். சாஷ்ட்ரமேவ ஜெயதே (ஆயுதங்கள் வெல்லட்டும்). நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம். தேவைப்பட்டால், அதற்காக கொலையும் செய்வோம்” என்று கூறி, பார்வையாளர்களை உறுதிமொழி எடுக்க கோரியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு பேசியுள்ள பாட்னாவைச் சேர்ந்த சாமியாரான தரம்தாஸ் மகராஜ், “நான் துப்பாக்கி வைத்துள்ள எம்பியாக நாடாளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டும். நாதுராம் கோட்சேவாகி, ஆறு தோட்டாக்களையும் அவருக்குள் சுட்டு இறக்கியிருப்பேன்” என்று கூறியிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்