Aran Sei

பெண்களை அவமதிப்பு செய்ததாக வழக்கு: யதி நரசிங்கானந்தின் பிணை மனுவை ரத்து செய்த ஹரித்வார் நீதிமன்றம்

டந்த மாதம் ஹரித்வாரில் நடைபெற்ற “தரம் சன்சாத்” நிகழ்ச்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டியதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்ட யதி நரசிங்கானந்த் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஹரித்வார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி 15 ஆம் தேதி, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திதேந்திர தியாகியை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யதி நரசிங்கானந்தை ஹரித்வார் மகாராஜா நகர் கோட்வாலி காவல்துறையினர் கைது செய்தனர்.
திதேந்திர தியாகி மற்றும் நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 17 ஆம் தேதி ஒன்றிய அரசு, டெல்லி காவல்துறை மற்றும் உத்தரகண்ட் அரசு ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
https://www.aransei.com/news/haridwar-court-sends-narsinganand-to-14-day-judicial-custody/
இவ்வழக்கானது, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறை யதி நரசிங்கானந்திற்கு எதிராகப் பிரிவு 505-1(C), 509 (பெண்ணை அவமானப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமானவற்றை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் பூசாரியான நரசிம்மானந்த், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை  ‘தர்ம சன்சத்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
https://www.aransei.com/news/yati-narasinganand-to-be-arrested-for-hate-speech-against-islamists-police-confirm/
இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய விவகாரத்தில், யதி நரசிங்கானந்த், ஜிதேந்திர தியாகி, சத்வி அன்னப்பூர்னா உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source : indianexpress
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்