Aran Sei

‘ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் தோல்விக்கு தலித்துகளே காரணம்’ – வெடிவெடித்துக் கொண்டாடிய ஆதிக்க சாதியினர்

ந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் அரையிறுதி  போட்டியில் தோல்வியை தழுவிய சமயத்தில்  முக்கிய வீராங்கனையான வந்தனா கட்டாரியா வீட்டு முன்பு ஆதிக்கச் சாதியினர்  வெடி வெடித்து  கொண்டாடியுள்ளனர்.

மேலும், இந்திய மகளிர் ஹாக்கி அணியில் “பெரும்பான்மையான   தலித்துகள்” இடம்பெற்றிருந்தாலேயே  அணி தோல்வியுற்றதாகக் கூறி,  ஆதிக்க சாதியைச் சார்ந்த  இருவர்  வந்தனா கட்டாரியா வீடு முன்பு வெடி வெடித்து , நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

அதுமட்டுமல்லாது, சாதி ரீதியாக இழிவுபடுத்தி  வந்தனாவின் குடும்பத்தை திட்டியும் உள்ளனர்.

டோக்கியோவில் நடந்து வரும்  ஒலிம்பிக்கின்   அரையிறுதி  ஹாக்கிப்  போட்டியில் இந்திய மகளிர் அணி  அர்ஜென்டினாவிடம் தோல்வியை   2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியுற்றது.

இந்நிலையில், இந்தத் தோல்விக்கு அணியில் பெரும்பான்மையாக இடம்பெற்றிருந்த தலித் வீராங்கனைகளே காரணம் என்று குற்றம்சாட்டி அவர்கள் இவ்வாறு  கொண்டாடியுள்ளனர்.

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

இதுகுறித்து தெரிவித்துள்ள வந்தனாவின் சகோதரர், “நாங்கள் ஹாக்கி போட்டியில் தோற்றது குறித்து சோகமாக இருந்தோம்.  அந்தப் போட்டி முடிந்த சில நிமிடங்களில் நாங்கள் சில சத்தத்தை  உணர்ந்தோம். எங்கள் வீட்டு வாசலில் வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது .  உடனே நாங்கள் வெளியே சென்ற பார்த்தபோது, அங்கு எங்கள் கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர் இருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், “அவர்கள் எங்கள் குடும்பத்தை சாதி ரீதியாக இழிவுப்படுத்தினார்கள். அது மட்டுமல்லாது இந்திய மகளிர் ஹாக்கி அணியில் பெரும்பான்மை தலித் பெண்கள் இடம்பெற்றுள்ளதலேயே அணி தோற்றுள்ளது. ஹாக்கி   என்றில்லை அனைத்து விளையாட்டுகளில்  இருந்தும் தலித்துகளை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இது எங்கள் மீது  நடத்தப்பட்ட சாதிரீதியிலானத் தாக்குதல்” என்றும் குறிபிட்டுள்ளார்.

’14 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை மாநிலஅரசே விடுவிக்கலாம்’ – உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எஸ்டிபிஐ வலியுறுத்தல்

உத்தரகண்ட்டை சேர்ந்த வந்தனா, ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்