Aran Sei

‘பயமின்றி வாக்களிக்க மாதிரி தேர்தல் வேண்டும்’ – அரசுக்கு வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளர்கள் சங்கம்

தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அரசு உரிய உதவி செய்ய வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது செல்வி என்கிற மாற்றுத்திறனாளி பெண் வாக்கு சாவடிக்கு வாக்களிக்கச் சென்றபோது அங்குச் சக்கர நாற்காலி இருந்தது என்றும் , ஆனால் தள்ளிச்செல்ல தன்னார்வலர் இல்லாதால் அதைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் தேர்வு – மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

மேலும் 2019 ஆம் ஆண்டு தேர்தலின்போது வாக்களிக்கச் சென்ற அலமேலு , ” வாக்கு சாவடியில் சக்கர நாற்காலி இல்லை, தேர்தல் அலுவலர்களும் உதவமுன்வரவில்லை அதனால் அந்தத்தேர்தலில் வாக்களிக்காமல் திரும்பினேன்” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண் மாற்றுத்திறனாளிகள் நலஉரிமை சங்கத்தின் கௌரவ உறுப்பினர் அருணா பேசுகையில், ” பார்வையற்றோருக்கான தொட்டுணர் பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. ஆனால், கட்சியின் சின்னங்கள் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் பொறிக்கப்படவில்லை ” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க நடைமுறையில் வெளிப்படைத்தன்மை தேவை – குடிமக்கள் குழு கோரிக்கை

மேலும், பெண் கண் பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் வனஜா குறிப்பிடுகையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரெய்லி எழுத்துக்கள் சரிவரப் பொறிக்கப்படாததால் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதே சந்தேகமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதுகேளாதோர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், காதுகேளாதோர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செய்கைமொழி காணொளி வாக்குசாவடியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகின்றது.

“நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலின் முடிவைப் பெண்கள்தான் தீர்மானிப்பார்கள் – கனிமொழி

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து தெரிவித்த முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டோர் நல சங்க தலைவர் ஞான பாரதி, , தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள படி 1:10 முதல் 1:14 சாய்வு கோணத்தில் சாய்வுத்தளம் அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், முதல்முறை வாக்களிக்கும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க அவர்களுக்கு மாதிரித் தேர்தல்கள் நடத்தப் பட வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்