பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை 16 குழந்தைகள் உட்பட 67 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 1 குழந்தை உட்பட 6 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர்.
பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்
காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏறத்தாழ 1500 ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மறுபுறம், கடந்த மே 12 அன்று வரை இஸ்ரேலிய படையினர் காசா பகுதியில் எண்ணற்ற இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாகாணங்களுக்கான அமெரிக்கா அரசின் செயலர் அந்தோணி பிளிங்கின், பதற்றமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர பாலஸ்தீனத் தலைவர் மஹ் -மௌத் அப்பாஸிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா
அப்போது, இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு தன் வருத்தங்களையும், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தன் கண்டனங்களையும் அந்தோணி பிளிங்கின் கூறியுள்ளார்.
காசா பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் வரும் மே 14 அன்று நடத்தப்பட வேண்டுமென துனிசியா, நோர்வே, சீனா ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில், இருநாட்டு எல்லைகளிலிருந்தும் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் பின்வாங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வளர்ந்து வரும் வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து இங்கிலாந்து அரசு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. மேலும், அதிகரித்திருக்கும் பதட்டம் உடனடியாக தணிவதை காண விரும்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
I am urging Israel and the Palestinians to step back from the brink and for both sides to show restraint. The UK is deeply concerned by the growing violence and civilian casualties and we want to see an urgent de-escalation of tensions.
— Boris Johnson (@BorisJohnson) May 12, 2021
காசா பகுதியில் நடந்து வரும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பன்னாட்டு குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மையம் (டிசிஐ) , இஸ்ரேல் அரசு சர்வதேச விதிகளை முழுமையாக மீறியுள்ளதாகவும், அதிக மக்கள் வாழக்கூடிய பகுதியில் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ,காசா பகுதியே பாதுகாப்பற்ற பகுதியாக மாறிள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.