இந்தியாவில் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த 400 மில்லியன் மக்களில் சரிபாதி பேர், பெற்றுள்ள கடன் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள் குறைந்தபட்சம் ஒரே ஒரு கடன் அல்லது கடன் அட்டை பெற்றுள்ளதாகவும் கடன் தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், புதிய வாடிக்கையாளர் கடன் பெறும் வகையில் கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தின் பழைய வாடிக்கையாளர்கள் என்று ட்ரான்ஸ்யூனியன் சி.ஐ.பி.ஐ.எல் அமைப்பின் அறிக்கை கூறுவதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
ஜனவரி 2021 வரைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களில், 200 மில்லியன் மக்கள் சில்லறை கடன் சந்தையில் பெற்றுள்ளக் கடன் நிலுவையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த 400 மில்லியன் மக்களில், 18-33 வயதுடைய கிராமப்புற மற்றும் சிறு- நகர்ப்புற பகுதி மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், இந்தப் பிரிவில் கடன் ஊடுருவல் 8 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கடன் தகவல் நிறுவனம் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் 15% ஆட்டோவுக்காகவும், 31% வீடு கட்டுவதற்காககாகவும், தனிநபர் கடன்களில் 22 சதவீதமும், நுகர்வோர் நீடித்த கடன்களில் 25 சதவீதமும் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.