மேற்குவங்கத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்ப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சவுகதா ராய் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சரிபாதி பேர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலமைச்சரே இது குறித்து இறுதி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநில தேர்தல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களால் தோல்விக்கு உள்ளானவர்கள் பாஜகவின் அரசியல் செயல்பாடுகளால் மகிழ்ச்சிக் கொள்ளவில்லை என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து வருவதும், சிலர் கட்சியில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.