Aran Sei

ஹல்திராம் நிறுவனத்தின் உணவு பாக்கெட்டில் உருது எழுத்துகள் – கடை மேலாளருடன் வாக்குவாதம் செய்த தொலைக்காட்சி நிருபர்

Credit : NDTV

டெல்லியில் ஹல்திராம் நிறுவனத்தின் உணவு பாக்கெட்டுகளில் உருதுவில் எழுதப்பட்டிருப்பது தொடர்பாக  கடை மேலாலருடன் சுதர்ஷன் தொலைக்காட்சியின் நிருபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உணவு பொருட்களின் பாக்கெட்களில் உருது மொழியில் ஏன் எழுத்தப்பட்டுள்ளது என்று நிருபர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கடை மேலாளர், “எங்களிடம் ஹிந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மூன்று மொழிகளில் பொருட்கள் இருக்கின்றன. அந்த மொழிகளை அறிந்தவர்கள் அதை படித்து, அந்த உணவைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

நவராத்திரியில் கறிக் கடைக்கு தடை விதித்த டெல்லி மேயர் – நாடு முழுதும் தடைவிதிக்க பாஜக எம்.பி., வேண்டுகோள்

இந்த பதிலை ஏற்க மறுத்த நிருபர், “மக்களிடம் இருந்து எதை மறைக்க உருதுவில் எழுதியுள்ளீர்கள். நவராத்திரியின்போது உருதுவில் எழுதியிருப்பது, இந்துக்களுக்கு துரோகம் செய்வது போன்றது. மிருகங்களின் எண்ணெயில் சமைக்கப்பட்டதா, பீஃப் எண்ணெய்யில் (மாட்டு கொழுப்பு) சமைக்கப்பட்டதா?” என அந்த பெண் நிருபர் தொடர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார்.

“உங்களுக்கு வேண்டுமானால் உணவு பொருட்களை வாங்கிச் செல்லுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். தேவையற்ற சர்ச்சைகளை ஹல்திராம் ஊக்குவிக்காது”என கடை மேலாளர் பதிலளித்தார்.

இந்த காணொளியைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் அவர்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இது அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதால் உருதுவில் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் கூறும்போது ரயில் நிலைய அறிவிப்பு பலகைகள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றில் கூட உருது இடம்பெற்றுள்ளது. அதையும் புறக்கணிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அம்னெஸ்டி இந்தியா தலைவர் – வழக்கு பதிந்திருப்பதால் வெளிநாடு செல்ல தடை என சிபிஐ விளக்கம்

தீவிர வலது சாரி ஊடகமான சுதர்ஷன் தொலைக்காட்சி, அதன் இஸ்லாமிய வெறுப்பு உள்ளடக்கத்திற்காக உச்சநீதிமன்றத்தால் தணிக்கை செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது நீதிபதி சந்திரசூட், “அரசு வேலைகளில் இஸ்லாமிய சமூகங்கள் ஊடுருவ சதி செய்கிறது என்கிற சுதர்சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நயவஞ்சகமானது மற்றும் வெறித்தனமானது. ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

”நான் நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தைப் பார்தேன். பல காட்சிகள் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது” என்று நீதிபதி இந்து  மல்ஹோத்ரா கூறியிருந்தார்.

Source: NDTV

 

மக்களுக்கு இலவசங்களைக்  கொடுத்தால் நாடு திவாலாகி விடுமா?

பாஜகவின் பொய்யை கட்டுடைக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பால சந்திரன்

மேலும் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்