Aran Sei

‘பத்திரிகையாளர்களை தரம் தாழ்த்தி விமர்சித்த ஹெச்.ராஜா’ – எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் கண்டனம்

த்திரிக்கையாளர்களை தரம் தாழ்த்தி விமர்சித்த பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கருத்துரிமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வேட்டு வைக்கும் வகையில் தொடர்ந்து பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். இத்தகைய அநாகரிமான பேச்சு கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதற்கு முன்னர் ஒருமுறை கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களை தேச விரோதி என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான தலித் கிறிஸ்தவ சிறுவன் மரணம் – தேவாலயத்திற்கு செல்லக்கூடாதென மிரட்டிய இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டாரா?

பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் இது போன்று இழிவான விமர்சனங்களை முன்வைப்பது என்பது ஹெச்.ராஜாவின் வாடிக்கையாக உள்ளது. ஹெச்.ராஜா மட்டுமல்ல பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஆட்சியின் அனுசரணை காரணமாக இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துக் கடிவாளம் போடாததன் விளைவே ஹெச்.ராஜா போன்றவர்களின் பத்திரிக்கையாளர்கள் மீதான வரம்புமீறிய இழிவான பேச்சுக்குக் காரணமாகும். ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஹெச்.ராஜா மீது தமிழக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

‘அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கும் பிரசார் பாரதி’ – தமுஎகச கண்டனம்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறைந்தபட்ச நாகரிகத்தைக் கூட பத்திரிக்கையாளர்களிடம் கடைப்பிடிக்காமல், தரம் தாழ்ந்து ஏசியும், பேசியும் வரும் ஹெச்.ராஜாவை அனைத்து ஊடக நிறுவனங்களும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்