ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போர்ட் கிளப்பில் வேலைபார்த்த தொழிலாளர்களைப் பணி நீக்கிய காரணத்திற்காக அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி LTUC மாநில செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான பாரதி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தின் 9-வது நாளான இன்று காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்
கொரோனா காலக்கட்டத்தில் பலர் வேலை இழந்த சூழலில் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போர்ட் கிளப்பில் பணிபுரிந்த ஊழியர்களும் பணி இழந்துள்ளனர். தற்போது அரசு 100 விழுக்காடு ஊழியர்களோடு பணி நிறுவன்ங்களை இயக்கலாம் என்று அறிவித்த நிலையில் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போர்ட் கிளப் நிர்வாகத்தினர். மீண்டும் ஊழியர்களைப் பணியமர்த்தவில்லை என்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டி LTUC சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான பாரதி காலவரையற்ற உண்ணாநிலை போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக முதல்வரைச் சந்திக்க சென்ற வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள்மீது காவல்துறை உதவி ஆணையர் சரவணன் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாக இடது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தினகர், அரண்செய் – யிடம் தெரிவித்தார்.
மேலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் போராட்டக் களத்தில் உள்ள நிலையில் காவல் துறையினர் அத்துமீறித் தாக்கியதாகவும் கூறினார்
தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என்று இடது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தினகர் தெரிவித்தார்.
இந்தப் போராட்டதிற்கு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.