Aran Sei

கியான்வாபி மசூதி வழக்கு – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிமன்றம்

கியான்வாபி மசூதி வழக்கின் விசாரணையை வாரணாசியின் மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில் நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்

கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள இந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஐந்து பெண்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கம் இல்லை – சமாஜ்வாதி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் கருத்து

இன்று காலை விசாரணை தொடங்கி 45 நிமிடங்களுக்கு நடைபெற்றது. நான்கு மனுதாரர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட 23 பேர் மட்டுமே விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

வழக்கறிஞரும் முன்னாள் ஆணையருமான அஜய் மிஸ்ரா நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், கியான்வாப்பி மசூதி வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்தி வைத்துள்ளது.

கியான்வாபி: சிவலிங்கத்தை விமர்சித்ததாக புகார் – டெல்லி பல்கலை., வரலாற்றுத்துறை பேராசிரியர் கைது

முன்னதாக, வாரணாசியை சேர்ந்த லஷ்மி தேவி, சீதா சாஹூ, மஞ்சு வியாஸ், ரேகா பதக், டெல்லிய சேர்ந்த ராக்சி சிங் ஆகிய  ஐந்து பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கியான்வாபி மசூதியின் வளாகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிற ஒரு சுவற்றில் ஷிரிங்கர் கவுரி தேவி, விநாயகர், ஹனுமன் மற்றும் நந்தி உருவங்கள் இருப்பதாகவும் அதை தினமும் வழிபடுவதற்கு மசூதி நிர்வாகம் தடை ஏற்படுத்த கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்கள்.

வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் காணொளி பதிவு செய்யப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி சிவில் நீதிமன்றதில் நிலுவையில் உள்ள வழக்கை அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதிமூலம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

இந்த வழக்கு சிக்கலானது மட்டுமன்று  உணர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. விசாரணை நீதிபதிக்கு பதிலாக மாவட்ட நீதிபதி  இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால், அனுபவம் வாய்ந்தவர்கள் அதைக் கேட்டால் நல்லது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

Source: hindustantimes

கொல்லப்பட்ட மக்கள் குற்றவாளிகளா? Maruthaiyan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்