Aran Sei

குவுஹாத்தி, சூரத்தில் இருக்கும் மகாராஷ்டிரா எம்எல்ஏகளுக்கு பில் கட்டுவது யார்? கருப்பு பணத்தின் பின்னணியை அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையின் கண்டுபிடிக்க வேண்டும் – தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

சிவசேனா எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் குவுஹாத்தியில் மற்றும் சூரத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். அதன் பில்களை யார் செலுத்துகிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதனுள் இருக்கும் கருப்புப் பணத்தின் மூலத்தைக் வருமான வரித் துறையும் அமலாக்க துறையும் கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அல்ஜசீரா செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்லாமிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் – ஐநா மனித உரிமைகள் விசாரணையில் தகவல்

தேசியவாத காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே கூறும்போது, ” சிவசேனா எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சூரத் மற்றும் கவுகாத்தியில் தங்கியுள்ள விடுதிகளின் கட்டணம் மற்றும் வாடகை விமானத்தின் கட்டணத்தை யார் செலுத்துகிறார்கள்? குதிரை பேரம் ரூ. 50 கோடி என்பது உண்மையா? வருமான வரித் துறையும் அமலாக்க துறையும் செயல்பட்டால் கருப்பு பணத்தின் ஆதாரம் அம்பலமாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பெரும்பாண்மையான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். இவர்களே குவ்ஹாத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது.

Source: The New Indian Express

சாமி சொத்தை திருடினா மனசு புண்படாதா I Thillai Chidambaram Temple I Deekshithar Atrocitie

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்