Aran Sei

ஆயுதப்படையினரை முகநூலில் விமர்சித்த எழுத்தாளர் – கைது செய்த காவல்துறை

மாவோயிஸ்ட்களுக்கும் ஆயுதப்படையினருக்கும் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயுதப்படையினர் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 3 அன்று மாவோயிஸ்ட்களுக்கும் ஆயுதப்படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர்.

” சட்டப் பேரவையை நோக்கிய ரிக்‌ஷா பயணம் ” – வங்காளத்தின் ஆன்மாவை பாதுகாக்க களத்தில் இறங்கிய எழுத்தாளர்

இதுகுறித்து கவுகாத்தி பகுதியைச் சார்ந்த எழுத்தாளர் சிகா சர்மா தனது முகநூல் பதிவில், “சம்பளம் வாங்கிக்கொண்டு பணியின்போது உயிரிழக்கும் ஆயுதப்படையினரை தியாகிகள் என்று சொல்லாதீர்கள். அப்படி பார்த்தால் மின்வாரிய துறையில் மின்கசிவினால் இறக்கும் ஊழியரையும் தியாகி என்றுதான் சொல்வீர்களா? ஊடகங்களே மக்களை உணர்ச்சிவசப்பட செய்யாதீர்கள்” என்று பதிவிட்டிருந்தாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உமி தேக்க ப்ருகா மற்றும் கங்கனா கோஸ்வாமி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் எழுத்தாளர் சிகா சர்மா கைது செய்யப்பட்டுள்ளதாகதி வயர்  செய்தி கூறுகிறது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்

இதைத்தொடர்ந்து, எழுத்தாளர் சிகா சர்மா மீது கவுகாத்தி காவல்துறை பிரிவு 124A ன் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தன் மீதான வழக்கு குறித்து கைதுசெய்யப்படுவதற்கு முன் முகநூலில் சிகா வெளியிட்டிருந்த பதிவில், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அவர் பதிவு எவ்வாறு மனஅழுத்தத்தை உண்டாக்குமெனவும், தன்மீதான போலியான பரப்புரைக்கு சட்டத்தில் இடமுண்டா ? என்றும், தன்மீதான கொலைமிரட்டல் குறித்து இதற்கு முன் அவர் கொடுத்த புகாரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ? என்று சிகா கேள்வி எழுப்பியுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு

எழுத்தாளர் சிகா சர்மா வானொலியில் பணிபுரிந்து வருகிறார், மேலும் முகநூலில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அவர், அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி வெளியிடும் பதிவிற்கு எதிராகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோம் என சிலர் மிரட்டியும் உள்ளனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்