Aran Sei

கௌஹாத்தி விமான நிலையம் அதானியிடம் ஒப்படைப்பு – முறைகேடு புகாருக்கு இடையிலும் ஒன்றிய அரசு நடவடிக்கை

கௌஹாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் (எல்ஜிபிஐ) செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் மேம்பாட்டு பொறுப்புகள் அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வடகிழக்கு மாநிலங்களின் முதன்மையான விமானநிலையத்தை மேம்படுத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் தொடக்கமாக விமான நிலையத்தின் சாவியை, இந்திய விமானநிலையத் ஆணையத்தின் (ஏஏஐ) இயக்குநர் ரமேஷ் குமார், அதானி குழுமத்தின் முதன்மை விமான நிலைய அதிகாரி உட்பால் பருவாவிடம் வழங்கினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஓபிசி இட ஒதுக்கீட்டில் தடையாக இருக்கும் கிரீலேயர் முறையை நீக்க வேண்டும்’- ஒன்றிய அரசிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்

6 விமான நிலையங்களைத் தனியார்மயப்படுத்தும் திட்டத்தை ஏஏஐ அறிவித்தது. இதில் அதானி குழுமம் அதிகபட்ச தொகையைக் கோரியதை அடுத்து ஏஏஐயிற்கும் அதானி குழுமத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின்படி, லக்னோ, மங்களூரு, அகமதாபாத் விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கௌஹாத்தி விமான நிலையமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையங்கள் நிர்வாகம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்தின் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக’ – பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

ஏற்கனவே, அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ள மூன்று விமான நிலையத்தின் சொத்துகள் முறைகேடாக குறைவான விலையில் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் சங்கம் கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தது.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், “ரூ. 1300 கோடி என மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்திருந்தனர்.

மேலும், அதானி குழுமத்திற்கு மேற்கொண்டு விமான நிலையங்களை குத்தகைக்கு அளிக்க வேண்டாம் என அவர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

Source : PTI

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்