Aran Sei

குருகிராம்: இறைச்சி கடை வைக்க இந்துத்துவ அமைப்பு எதிர்ப்பு

ண்டிகரில் உள்ள குருகிராம் நகரில் ஷீத்லா அம்மன் கோயில் இருப்பதால் நகரைச் சுற்றி பத்து கிலோ மீட்டருக்குள் புதிய இறைச்சி கடை வைக்க  இந்து சங்கர்ஷ் சமிதி என்கிற இந்துத்துவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது போன்ற உரிமம் வழங்கும் செயல்முறையை குடிமை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு ஹிந்து சங்கர்ஷ் சமிதி கோரிக்கை விடுத்துள்ளது.

“புனித” நகரமான குருகிராமில், ஷீத்லா அம்மன் கோயில் பலிபீடம் இருப்பதால், இறைச்சி விற்பனைக்கு புதிய உரிமம் வழங்கப்படாது என்று முதலமைச்சர் மனோகர் லால் உறுதியளித்துள்ளதாகவும், இறைச்சி கடைக்கான புதிய விண்ணப்பங்களை கைவிட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று  இந்து சங்கர்ஷ் சமிதி மிரட்டல் விடுத்துள்ளது.

அல்ஜசீரா செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்லாமிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் – ஐநா மனித உரிமைகள் விசாரணையில் தகவல்

இந்து சங்கர்ஷ் சமிதிதரப்பில் கூறும்போது, ”2017 அக்டோபரில் ஷீத்லா அம்மன் கோயில் மற்றும் குரு துரோணாச்சாரியார் இருக்கும் இந்த புனித நகரத்தில் புதிய இறைச்சி விற்பனைக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தீர்கள். தற்போது வந்துள்ள விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், ஷீட்லா அம்மன் கோவிலின் 10 கிமீ சுற்றளவுக்கு தற்போது உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சட்டவிரோத கடைகளை மூட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர் .

குருகிராமில் 119 உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளும், 1,500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத கடைகளும் உள்ளன. பல ஆண்டுகளாக புதிய உரிமம் வழங்கப்படவில்லை. “மற்ற புனித நகரங்களுக்கு விதிகள் இருக்கும்போது, ​​குருகிராம் ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்” என்று இந்து சங்கர்ஷ் சமிதி கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

இது குறித்து இந்து சங்கர்ஷ் சமிதியின் தலைவர் மகாவீர் பரத்வாஜ் கூறும்போது, ஷீட்லா அம்மன் கோவில் ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மக்களின் மரியாதைக்குரிய பலிபீடம். அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.. “பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வ விற்பனைக்கு ஒரு தனி சந்தை அல்லது பகுதி ஒதுக்கப்பட வேண்டும், மேலும் சட்டவிரோத கடைகளை மூட வேண்டும். இதில் பேரம் பேச முடியாது, முதல்வர் கூட அறிவித்திருந்தார். இதை (உரிமத்தை) நாங்கள் ஏற்க மாட்டோம்”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: The New Indian Express

திமுகவை கேள்வி கேட்க சி.வி.சண்முகம் யார் | Senthilvel Interview | ADMK Latest News

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்