Aran Sei

பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது – குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி தலைவர்கள் கருத்து

டெல்லியல் ஜூன் 24 ஆம் தேதி நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பால், குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியை (பிஏஜிடி) சேர்ந்த ஜம்மு காஷ்மீரின் ஐந்து அரசியல் கட்சியின் தலைவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பிரதமர் மோடியுடனான சந்திப்பின் முடிவுகுறித்து பிஏஜிடியின் அனைத்து தலைவர்களும் அவர்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அரசியல் மற்றும் பிற கைதிகளை விடுவிப்பது. 2019 ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரை திணறடித்த முற்றுகை மற்றும் ஒடுக்குமுறை சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள்யை அவர்கள் எதிர்பார்த்தனர்” என குப்கர் கூட்டணியின் செய்தி தொடர்பாளர் எம்.ஒய். தாரிகாமி கூறினார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இந்தப் பிரச்னையில்  பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களை சென்றடைவதற்கான மிகவும் தேவையான செயல்முறையை நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கும் என அவர் நினைவு படுத்தியுள்ளார்.

மாநில அந்தஸ்து மீட்டெடுப்பது குறித்த தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ள தாரிகாமி கூறுகையில், “மாநில அந்தஸ்து மீட்டெடுப்பதைப் பொறுத்தவரை, அது நாடாளுமன்றத்தில்  பா.ஜ.க அளித்த வாக்குறுதி, அவர்கள் தங்கள் வார்த்தையை மதிக்க வேண்டும். எனவே, ஜம்மு காஷ்மீருக்கான முழு மாநில அந்தஸ்து மீண்டும் நிலைநாட்டப்பட்ட பின்னரே எந்த சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இந்த இலக்கை அடைவதற்காக, இந்த விவகாரத்தில் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும் நோக்கத்துடன், ஜம்மு காஷ்மீரில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை அணுக குப்கர் கூட்டணி முடிவு செய்துள்ளது.” என கூறினார்.

இறுதி வரை ஓயாத போராட்டக்குரல் – பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி மரணம்

ஜூலை 4 ஆம் தேதி, தொடர்ச்சியான கூட்டங்களை நடத்திய குப்கர் கூட்டணி “2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது திணிக்கப்பட்ட அரசியலமைப்பு, சட்ட மற்றும் அரசியல் வழிவகைகளை பயன்படுத்தி அரசியலமைப்புக்கு முரணான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத மாற்றங்களை மாற்றியமைக்க ஒன்றாக போராட வேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தியது.

ஸ்ரீநகரில் உள்ள பரூக் அப்துல்லா இல்லத்தில் அவரது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குப்கர் கூட்டணியின் உறுப்பினர்கள் கூடியுள்ளனர். இதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் மெகபூபா முப்தி, சி.பி.ஐ(எம்) கட்சியின் எம்.ஒய்.தாரிகாமி, தேசிய மாநாட்டின் நீதிபதி  ஹஸ்னைன் மசூத், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் ஜாவேத் முஸ்தபா மிர், அவாமி தேசிய மாநாட்டின் முசாபர் அகமது ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீதான கும்பல் வன்முறைக்கு இந்துத்துவ சிந்தனையே காரணம் – ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

ஜூன் 24-ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்டது என்று குப்கர் கூட்டணி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்