ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தையளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், மீண்டும் 370-வது சட்டப் பிரிவைக் கொண்டுவரக் கோரியும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியை (People’s Alliance for Gupkar Declaration-PAGD) உருவாக்கினர்.
இந்த கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.
குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியின் தலைவராக பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். இதன் துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டணி, சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு 280 தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருவதாக தி இந்து செய்து வெளியிட்டுள்ளது. மக்கள் மாநாட்டு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் இம்ரான் அன்சாரி, அந்த கட்சியின் தலைவர் சஜித் லோனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியின் நோக்கங்களுக்கு நான் எந்த வகையிலும் எதிராக இல்லை. ஆனால் தேர்தல்களின் போது, கூட்டணியில் இருக்கும் கட்சிகள் செய்த துரோகத்தை பார்க்கும்போது, குப்கார் கூட்டணியின் நோக்கங்களைப் பற்றி மக்களை நம்ப வைப்பது கடினம்” என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் நிலச் சட்டம் – மத்திய அரசின் விளக்கம் பொய்களின் மூட்டை என விமர்சனம்
”மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலின் போதே, குப்கார் கூட்டணியின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்ளும் பொழுது, பெரிய நோக்கங்களுடன் அவர்கள் செயல்படும் போது குப்கார் கூட்டணியை எப்படி நம்ப முடியும் ? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் – உண்மையில் வெற்றி பெற்றது யார்?
மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் போட்டியிட குப்கார் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து வேட்பாளர்களை முடிவு செய்தாலும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா. தனிப்பட்ட முறையில் அனைத்து தொகுதியிலும் போலியான வேட்பாளர்களை (Proxy Candidates) நிறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் – குழிதோண்டி புதைக்கப்படும் ஜனநாயகம்
மேலும் ”நேர்மையாக இருந்தால் கூட்டணி செயல்படும். இந்த கூட்டணியில் எந்த நேர்மையும் இல்லை என்பதை கடந்த இரண்டு மாதங்கள் காட்டுகின்றன” என்று மக்கள் மாநாட்டு கட்சியைச் சேர்ந்த இமாம் அன்சாரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்: தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரம் – குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியில் விரிசல்
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஃபயாஸ் அகமதும், போலி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், குப்கார் கூட்டணியின் தலைமை, போலி வேட்பாளர்களை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.