Aran Sei

விவசாயிகள் போராடி வரும் சிங்கு எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு – அடையாளம் தெரியாத நபரால் நேர்ந்த விபரீதம்

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சிங்கு எல்லை பகுதியில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினர் என இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த விவசாயிகள் கூறியதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த வன்முறையாளர்கள் இந்தச் செயலைச் செய்திருக்கலாம், எனக் காவல்துறை சந்தேகிப்பதாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

”இணைய ஏகாத்தியபத்தியத்தை  இந்தியாவில் அனுமதிக்க முடியாது” – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

இந்தச் சம்பவத்தால் யாரும் காயம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக சோனிபட் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், தி வயர் கூறியுள்ளது.

சிங்கு எல்லை பகுதியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் கூடும் நிகழ்விற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதியில், நடைபெற்று வரும் போராட்டக்களத்தில், சுமார் 15 ஆயிரம் பெண் விவசாயிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், சமூக சேவகர்கள்  இணைந்திருப்பதாக, போராட்ட ஒருங்கிணப்பாளர்கள் கூறியதாக, தி  வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வலதுசாரி இந்து அமைப்புகளின் வன்முறைக்கு இடமில்லை – நியூசவுத் வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர்

”பெண்கள், விவசாய சமூதாயத்தின் பெரும் பகுதியாக உள்ளனர், ஆனால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. உண்மையில், அவர்கள் ஆண்களைவிட அதிகமாக வேலை செய்கிறார்கள். மகளிர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10,000 பெண்கள் எல்லைகளுக்கு வருவார்கள் என விவசாய சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சந்தூ தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போராட்டக் களத்தில் மேடை நிகழ்வு குறித்த திட்டமிடுதலையும் பெண்களே மேற்கொள்ள இருப்பதாக, கிரந்திகாரி கிஷான் சஙகத்தின் தலைவர் அவ்தார் சிங் மேஹ்மா கூறியதாக தி வயர் கூறியுள்ளது.

மேடையில் மாணவர்கள் அமைப்பு, விவசாய அமைப்பு  மற்றும் சமூக சேவை அமைப்பை சேர்ந்த பெண்கள் மேடையில் உரையாற்றுவார்கள் என மெஹ்மா தெரிவித்தாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்