Aran Sei

“இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – நாடாளுமன்றத்தில் குலாம் நபி ஆசாத் உருக்கம்

ம்மு காஷ்மீரை சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் உட்பட, நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தனது கடைசி உரையில் “இந்துஸ்தானின் முஸ்லீமாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

“நான் ஜம்மு காஷ்மீரில் கல்லூரியில் பயிலும்போது, ஆகஸ்ட் 14 (பாகிஸ்தான் சுதந்திர தினம்) ஆகஸ்ட்15 ஆகிய இரண்டு தினங்களையும் கொண்டாடியுள்ளோம். பெரும்பான்மையானவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதியைக் கொண்டாடுவார்கள். பாகிஸ்தானுக்கு இதுவரை செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். பாகிஸ்தனின் நிலைமைகளைப் படிக்கும்போது, நான் இந்துஸ்தானின் முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன். இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதை நாம் பார்க்கிறோம். அங்கு இந்துக்களும், கிஸ்துவர்களும் இல்லை.” என்று குலம் நபி ஆசாத் கூறினார்.

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக தவறான ட்விட் : சசி தரூர் கைதுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற

“இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தியினால், நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் வாய்ப்பைப் பெற்றேன்” என்று கூறிய குலாம் நபி ஆசாத் “வாஜ்பாயுடன் தொடர்பில் இருங்கள், பிஜேபியுடன் வேண்டாம்” என்று இந்திரா காந்தி தன்னிடம் கூறுவார் என்று நினைவுகூர்ந்தார்.

காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாதம் குறித்து பேசும்போது கண்கலங்கிய குலாம் நபி ஆசாத், அது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறினார்.

எதிர்கட்சித்தலைவராக அவையில் மேற்கொண்ட நடவடிக்கையை, அவைத் தலைவரும், பிரதமரும் தனிப்பட்ட தாக்குதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார்.

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

பதவிக்காலம் முடிவடையும், மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் நசீர் அஹமது லாவே பேசும்போது “இந்த அவை, ஜம்மு காஷ்மீருக்கு ஏதாவது செய்ய வேண்டும். நாங்கள் நிறைய இழந்துள்ளோம்… எங்களிடம் இருந்த ஒன்றே ஒன்று, சுற்றுலாத்துறைதான், அது சீர்குலைந்துள்ளது. நாங்கள் விடைபெற்றபிறகு, ஜம்மு காஷ்மீருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல்போய்விடும்” என்று உருக்கமாகப் பேசினார்.

மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, பதவிக்காலம் முடிவடையும் மற்றொரு உறுப்பினரான மிர் முஹம்மது ஃபயாஸ் பேசும்போது “நாங்கள் இந்த நாட்டிற்காகப் பணியாற்றியுள்ளோம். இந்த நாட்டின் தேசிய கொடியை எங்கள் கிராமங்களுக்குச் சென்று சேர்த்துள்ளோம். ஊடகங்களும், மற்றவர்களும் எங்களை தேச விரோதிகள் என்று அழைப்பது எங்களை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மிர் முஹம்மது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, விடைபெறும் நாடாளு மன்ற உறுப்பினர்கள்குறித்து பிரதமர் மோடி மாநிலங்களைவில் பேசினார்.

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

அப்போது அவர், “இன்று நாம், நாடாளுமன்றத்திற்கு உயிர்கொடுத்த மற்றும் மக்கள் சேவைக்குப் பங்களித்த நான்கு பேர்பற்றிப் பேசுகிறோம். அவர்கள் நான்கு பேருக்கும் அவர்களுடைய பங்களிப்பிற்காக நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.

மேலும், “நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதும், மிர் முகம்மது மற்றும் நசீர் முகம்மது, என்னுடைய அலுவலகத்தில் பிரச்சனைகள்குறித்து விவாதிக்காத நளே இருந்ததில்லை. சில சமயம் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்ததுண்டு. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் தனித்துவமானது. அவர்களுடைய அர்ப்பணிப்பும் திறமையும் இந்த நாட்டிற்கும், ஜம்மு காஷ்மீருக்கும் பயனுள்ளதாக அமையும்” என்று மோடி தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத் குறித்து மேலும் பேசிய மோடி, “குலாம் நபியின் தகுதியை, யாரால் ஈடு செய்ய முடியும் என்பது என் வருத்தம். அவர் தனது கட்சிக்காக மட்டுமல்லால், நாட்டுக்காக உழைத்துள்ளார்.” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரில், குஜராத் சுற்றுப்பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை நினைவு கூர்ந்த மோடி “தீவிரவாதிகள் தாக்குதலில் குஜராத்தை சேர்ந்த எட்டுபேர் கொல்லப்பட்டனர். முதல் தொலைபேசி அழைப்பைக் குலாம் நபியிடமிருந்துதான் வந்தது. அந்தத் தொலைப்பேசி அழைப்பு, இந்த நிகழ்வைக் குறித்து தகவல் தெரிவிக்க மட்டுமல்ல, கவலையுற்ற குடும்ப உறுப்பினர் ஒருவரின் அழைப்பாக இருந்தது” என்று தெரிவித்தார்.

மீனா ஹாரிசின் ட்வீட் – சர்வதேச கவனம் பெறும் தலித் பெண் தொழிலாளர் நவ்தீப் கவுர்

“ஒரு நண்பராக, மிக உயர்ந்த தலைவராக அவரை நான் மதிக்கிறேன். இந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவருடைய ஆவல், அவரை எதுவும் செய்யாமல் இருக்க விடாது…. நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்று அவர் கருத வேண்டாம் என்று அவரை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். இந்த நான்கு பேரும் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கள் ஆலோசனைகளை வழங்க என்னுடைய கதவு திறந்தே இருக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள், மிர் முஹம்மது ஃபயாஸ் மற்றும் சம்ஷேர் சிங்கின் பதவிக்காலம் பிப்ரவரி 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், குலாம் நபி ஆசாத் மற்றும் நசீர் அஹமது லாவேவின் பதவிக்காலம் பிப்ரவரி 15ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் சட்டமன்றம் முடக்கப்பட்டுள்ளது. ஆகவே, பதவிக்காலம் முடிவடைந்தவர்களுக்கு பதிலாக, ஜம்மு காஷ்மீரின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம்பெறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்