Aran Sei

குஜராத்: ராமநவமி ஊர்வலத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், மசூதிகள் இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதா?

ப்ரல் 10 அன்று, இந்தியா முழுவதும் ராம நவமியைக் கொண்டாடப் பல ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இந்த ராமநவமி ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை நடத்தப்பட்டு எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் கலவரங்களும் வெடித்தன.

குஜராத்: ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

இன்னும் 7 மாதங்களில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அந்த விதத்தில் அண்மையில் ராமநவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத் நகரில், ராமநவமி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாள் ஏந்தி சென்று கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. அந்த ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் அஷ்ரப் நகருக்குள் நுழையத் தொடங்கியதும் தரக்குறைவான முறையில் ஊர்வலத்தில் சென்றவர்கள் பேசியதாக இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாய் அங்குப் பதற்றம் உருவாகி வன்முறை வெடித்துள்ளது.

2017 சட்டமன்றத் தேர்தலில், ஹிம்மத்நகர் சட்டமன்றத் தொகுதி வெறும் 2,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

 

இந்த பதற்றத்திற்குப் பிறகு, ராமநவமி பேரணியை ஹிம்மத்நகரில் நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர். ஆனால் காவல்துறையினரின் தடையை மீறி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஊர்வலம் சென்றுள்ளனர். இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது நடந்த கலவரத்தில் கல் வீச்சு, வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

ஆகவே கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். பிறகு கலவரம் நடந்த பகுதிகளில் 144 ஊரடங்கு தடை உத்தரவு விதித்துள்ளனர்.

ஜார்க்கண்ட்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – 8 பேர் காயம்

இஸ்லாமியர்கள் அதிகளவில் குடியிருக்கும் அஷ்ரப் நகரில் வேண்டுமென்றே காவி கோடியை ஏந்திக் கொண்டு ராமநவமி ஊர்வலம் வந்தனர் என்று அந்த பகுதியில் குடியிருக்கும் அகமது தெரிவித்துள்ளார். அப்படி அந்த பகுதியில் ஊர்வலம் செல்லும் போது என்னைப் போலவே பலரும் அவர்களது வீட்டின் கதவு, ஜன்னல்களை அடைத்து வைத்திருந்தனர் என்று அகமது தெரிவித்துள்ளார்.

அந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதைக் கேட்டவர்கள் அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்தனர். அதன் விளைவாய் 19 வயதான ஃபரீத் தலையில் அடிபட்டு அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஃபரீத்தை காப்பாற்ற வந்த அவரது மாமா சலீம் ஷேக்கும் கல்லால் தாக்கப்பட்டதால் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு; இணைய சேவை முடக்கம்

“ராமநவமி ஊர்வலம் வந்தவர்கள் திட்டமிட்டே இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் மசூதிகளை தீ வைத்து எரித்தனர். நான் வழக்கமாகச் செல்லும் மசூதியின் மீது காவி துண்டு அணிந்த ஒருவர் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டவாறே கற்களை வீசியதைப் பார்த்தேன்” என்று காஃபர் தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் மாதிரியான அமைப்புகள் இந்த ராமநவமி ஊர்வலம் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விளம்பரங்களில் ராமர் படத்துடன்  “ஜெய் ஹிந்துராஷ்டிரா” என்ற வார்த்தையும் இடம்பெற்றுந்தது.

ஹிம்மத்நகர் மட்டுமில்லாமல் அதைச்சுற்றியுள்ள அஷ்ரப் நகர், பாகிச்சா விஸ்தார், சப்பாரியா, சக்திநகர், மோதிபுரா விஸ்தார், ஹாசன் நகர் மற்றும் மாலி கி சபரியா போன்ற பகுதிகளிலும் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், தர்காக்கள் மற்றும் மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் கலவரக்காரர்களால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வாசிகள் தி வயர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

பீகார்: மசூதி மேல் காவிக்கொடியை ஏற்றி ராமநவமி கொண்டாடிய வலதுசாரியினர்

இதனால் ஹிம்மத்நகரில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது பாதுகாப்பு கருதி இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளை தீ வைத்து எரித்ததை போலவே ஹிம்மத் நகரில் இஸ்லாமியர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதே போல ஹிம்மத்நகரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள சந்தேலி என்ற கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் பொழுது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்  சமூக ஆர்வலர் ஹோசெபா உஜ்ஜைனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், இஸ்லாமியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாக்ரிக் அதிகார் மஞ்ச் குஜராத் என்கிற மனித உரிமை அமைப்பு குஜராத் காவல்துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. ஆனால் அந்த கடிதத்திற்கு காவல்துறையினர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தி வயர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்து இளைஞர்கள் வாள் ஏந்திச் செல்ல வேண்டும்’ – விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவர் சாத்வி சரஸ்வதி பேச்சு

“குஜராத்தில் மதப் பகையை வளர்க்கும் வகையில் மத ஊர்வலங்களில் ஈடுபடும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி ஆயுதங்களை எடுத்துச் சென்றோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். கலவரம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களைப் பரிசோதிக்க வேண்டும்” என்று நாக்ரிக் அதிகார் மஞ்ச் குஜராத் என்கிற அமைப்பு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சில பேரின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source : The Wire

இது அரபி குத்து இல்ல சங்கி குத்து – பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்