குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை குற்றமற்றவர் எனக்கூறி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விடுவித்ததற்கு எதிராகத் தொடர்ப்பட்ட வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மனுதாரர் கடிதம் அளித்துள்ளதால், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கான்வில்கர் தெரிவித்துள்ளார்.
ஊபா சட்டத்தில் சித்திக் கப்பான் : 5000 பக்க குற்றப்பத்திரிகை சட்டப்படி செல்லாது என வாதம்
வழக்கின் விசாரணை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கடந்த மார்ச் 16 ஆம் தேதி தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், விசாரணையை மேலும் ஒத்திவைக்க முடியாது என கூறியிருந்தது.
மராத்தா இட ஒதுக்கீடு வழக்கில் வழக்கறிஞர்கள் வேலையாக இருப்பதால் வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்குக் குஜராத் அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மருத்துவரை மிரட்டிய காங்கிரஸ் கட்சியினர் – பதவி விலகிய மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்
முன்னர், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம்வரை நடைபெற்ற ‘பெரிய சதி’ தொடர்பாக விசாரிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 28, 2002 ஆம் தேதி குல்பெர்க் சொசைட்டியில் நடைபெற்ற கலவரத்தின்போது எஹ்சான் ஜாஃப்ர் உள்ளிட்ட 68 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேரை விடுவித்து குஜராத் கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புலனாய்வு குழு கடந்த 2012 ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
மேலும், வழக்கை விசாரிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விசாரணையை முடிப்பதாக எஸ்.ஐ.டி கூறியிருந்தது.
சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவிற்கு எதிராகக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 5, 2017 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.