Aran Sei

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம்: மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் நிறைவேறியது

த்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது.

இம்மூன்று மாநிலங்களும் பாஜகவின் ஆட்சியின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து, ஹரியானா மற்றும் கர்நாடக மாநில அரசுகளும், இதே போன்ற ஒரு சட்டத்தை விரையில் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வழங்கியுள்ளன.

நேற்று (மார்ச் 31) குஜராத் மாநில சட்டபேரவையில், சட்ட விவகாரத் துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா தாக்கல் செய்த குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003-ல் திருத்தம் செய்யக் கோரும் மசோதா சட்டமாகியுள்ளது.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

இச்சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 முதல் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்தப் புதிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பெண்களைக் கட்டாயமாக மதம் மாற்றினால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதேநேரம், கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டவர் மைனர் பெண்ணாக, தலித் அல்லது பழங்குடியினராக இருந்தால், குற்றவாளிகளுக்கு 4 முதல் 7 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், ரூ .3 லட்சத்திற்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

ஒருவேளை, இச்சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அந்நிறுவனத்தின் தலைவருக்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சம் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். திருமணத்தின் வழியாக இத்தகைய மத மாற்றக் குற்றம் நிரூபிக்கப்படுமேயானால், அது பிணை வழங்கமுடியாத வழக்காக பதியப்படும்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்