தனது கோரிக்கைகளை குஜராத் மாநில பாஜக அரசு நிறைவேற்றத் தவறினால் ஜூன் 1ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார்
தேர்வுத்தாள் கசியவிடப்பட்டது தொடர்பான 22 வழக்குகளில் நியாயமான விசாரணை, உன்னாவில் உள்ள பட்டியல் சமூக மக்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுதல் மற்றும் முந்த்ரா துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்த நடவடிக்கை உள்ளிட்ட தனது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் ஜூன் 1ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த வழக்கில், ஏற்கனவே பிணை வழங்கப்பட்ட நிலையில், கைது செய்ய வந்த பெண் காவலரைத் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டு ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 29ஆம் தேதி, ஜிக்னேஷ் மேவானிவுக்கு அசாமின் பார்பேட்டா அமர்வு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.
பெண் காவலரை தாக்கியதாக ஒரு வழக்கை தயாரித்து, அதில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை சிக்க வைக்க அசாம் மாநில காவல்துறை முயன்றுள்ளதாக அம்மாநிலத்தில் உள்ள பார்பேட்டா நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் (மே 2), ஜிக்னேஷ் மேவானிக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக அசாம் மாநில பாஜக அரசு கவுகாத்தி உயர் நீதிமன்றம் சென்றது.
ஜிக்னேஷ் மேவானிக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவில் அசாம் காவல்துறைக்கு எதிராக பார்பெட்டா மாவட்ட நீதிமன்றம் அளித்த அவதானிப்புகளுக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், ஜிக்னேஷ் மேவானிக்கு வழங்கப்பட்ட பிணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிணை உத்தரவை எதிர்த்து பர்பெட்டா சாலை காவல் நிலைய விசாரணை அதிகாரி கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மூலம் தனி மனு தாக்கல் செய்வார் என்று அசாம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் டெபோஜித் சைகியா தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 3), ஒன்பது நாட்கள் அசாம் சிறையில் கழித்த பிறகு, குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு ஜிக்னேஷ் மேவானி வந்துள்ளார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ஜிக்னேஷ் மேவானியா, வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார்.
Source: New Indian Express
உங்க உளறலை நிப்பாட்டுங்க கங்கை அமரன்| சுந்தரவள்ளி நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.