பாஜகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்கு கொரோனா தொற்று வராது என்று கூறிய பாஜகவை சேர்ந்த குஜராத் சட்டபேரவை உறுப்பினர் கோவிந்த் பட்டேல் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார்.
கொரோனா தொற்று மீண்டும் நாடு முழுதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலும் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமலில் உள்ளது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 21) அம்மாநில ராஜ்கோட் தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினர் கோவிந்த் பட்டேல், “கடுமையாக உழைப்பவர்களுக்குக் கொரோனா தொற்று வராது. பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைப்பவர்கள். ஆகவே, அவர்களில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று வராது.” என்று பேசியுள்ளார்.
அவரது கருத்து கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கோவிந்த் பட்டேல் அளித்த நேர்காணலில், “நான் உழைப்பாளிகளுக்கு கொரோனா வராது என்றுதான் சொல்ல வந்தேன். ஆனால், தவறுதலாக பாஜகவினருக்கு என்று பேசிவிட்டேன். என்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
அண்மையில், பாஜகவை சேர்ந்த குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கும் பாஜக மூத்த தலைவர் ரஞ்சன்பென் பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Source : ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.