Aran Sei

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர் – காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக காவலர்கள் தகவல்

குஜராத் மாநிலம் பஞ்மஹால் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யபட்ட நபர் காவல்நிலையத்திலேயே தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சியை விநியோகிக்கச் சென்றதாக காசிம் அப்துல்லாஹ் ஹயாத் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 அன்று 7.45 மணியளவில் அவர் மீது அம்மாநில காவல்துறை முதல் தகவல் அறிக்கைப் பதிந்தது. ஆனால், நீதிபதியின் முன் ஆஜர்ப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறை,  கடந்த செப்டம்பர் 14 அன்று செவலியாலிருந்து கோத்ரா பகுதிக்குச் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காசிம்மின் வாகனத்தில்  மாட்டிறைச்சி இருந்தது என்று கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவர் மீது காசிம் மீது பிரிவு  429, மிருக வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11, குஜராத் விலங்கு பாதுகாப்பு (திருத்தம்) சட்டம், 2017 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதேவேளையில், பாஜக ஆளும் குஜராத்தில் பசுபாதுகாப்புக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. மேலும், குஜராத் விலங்கு பாதுகாப்பு (திருத்தம்) சட்டம், 2017 கீழ் கைது செய்யப்பட்டால் அதிகப்பட்சமாக ஆயுள்தண்டணைக் கூட விதிக்கப்படக்கூடும்.

இந்நிலையில், அதிகாலை 3.20 மணியளவில் காசிம் சிறைக்குள் தற்கொலை முயற்சி மேற்கொள்ளுவது சி.சி.டி.வி யின் வழியாக தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காசிம்மின் மரணம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: The wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்