Aran Sei

தீ விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் – அச்சுறுத்தும் கொரோனா மருத்துவமனை தீ விபத்து

குஜராத் மாநிலத்தில் உள்ள  மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும்  செய்துகள் தெரிவிக்கின்றன.

கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்ந்தியாவில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்ப்பூசிகள் பற்றக்குறை நிலவுவதாக மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. டெல்லி போன்ற இடங்களில் பினத்தை எரிப்பதற்கும் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

‘உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணிபுரிய வைக்கப்பட்ட ஆசிரியர்’ – கொரோனாவால் உயிரிழந்ததாக குடுப்பத்தினர் புகார்

இந்த் தீ விபத்து குறித்துப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திர சிங் சுடசமா, ”70 பேர் இவ்வளாகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 24பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தீ ஏற்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகள இடம் மாற்றினோம். மேலும், தீயை ஒரு மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றி, போராடி தீயை அணைத்துள்ளனர்.

தமிழகக் கோவில்களை தணிக்கை செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் பொதுநல மனு

இதற்கு முன்னர். மகராஸ்ட்டிரா மாநிலத்திலும் 2 முறை கொரோனா நோயாளிகள் உள்ள மருத்துவ வார்டில் தீப்பிடித்து எரிந்து கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.

source: India Today

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்